குட்டிக்கதைகள்

Monday 17 December 2012

நன்றியுள்ள கொக்கு

இரண்டு கொக்குகள் ஆகாயத்தில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் கழிந்தது.  இரண்டும் பூமியின் அருகே இறங்கியது.
தாகம் எடுத்தது. இரண்டும் நீர் நிறைந்த குளத்தருகே நின்று நீரை சிறிது அருந்தின. ஒற்றைக்காலில் தவம் செய்வதுபோல் நின்றன. தேவையான மீனையும் உண்டு மகிழ்ந்தன.
"வா நண்பனே! பறந்து சொல்வோம்.. நம் கூட்டிற்க்கு செல்ல இன்னமும் நிறைய தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது.." முதலாவது கொக்கு சொன்னது.
"சிறிது பொறு நண்பனே.. அருகிலேயே நாம் முன்னம் நீர் அருந்தி ,இரை பிடிக்கும் குளம் உள்ளது. அதை போய் பார்த்துவிட்டு வருவோம்" இரண்டாம் கொக்கு பதில் சொல்வது போல் தன் கருத்தைச் சொன்னது.
"அடப்போடா! அந்த வற்றிப் போன குளத்தை எதற்கு பார்க்க வேண்டும்? உனக்கு என்ன பைத்தியமா பிடித்துவிட்டது?" முதலாவது.
"நாம் நிறைய தூரம் பறக்க முடியாதபோது நமக்கு உணவிட்ட குளத்தையும், அதன் அருகே நமக்கு கூடு கட்ட இடம் கொடுத்த மரத்தையும் பார்த்துவிட்டு வருவோம்.. அப்போதுதான் நாம் நன்றி உணர்வுமிக்கவர்கள்.. இல்லையேல் மனிதர்களைப் போல நன்றி கெட்டவர்களாவோம்" இரண்டாவது கொக்கு பதில் சொல்லியது.
இரு கொக்குகளும் பழைய குளத்தை பார்க்க பறந்தன.

நீதி:

நம்மை பெற்று வளர்த்த தாய் தந்தை, கல்வி கண் திறந்த ஆசிரியர்கள், நல்வாழ்வை தந்த இறைவன் ஆகியோரை என்றும் மறக்கக்கூடாது